பதுங்கி இருந்த ரவுடி சாகுல்ஹமீதை ட்ரோன் மூலம் வளைத்துப் பிடித்து தென்காசி காவல்துறையினர்!

Published:

shakul hameed arrested - 2026

தென்காசி மாவட்டம் தென்காசி நகரைச் சேர்ந்த சாகுல் ஹமீது, இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது,

கொலை முயற்சி வழக்கு தொடர்பாக சாகுல் ஹமீதை தென்காசி காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்,

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சாகுல் ஹமீது கடந்த இரு தினங்களுக்கு முன்பு தென்காசி அருகே பச்ச நாயக்கன் பொத்தை பகுதியை தன் வசமாக்கி கொண்டு, அங்கு பொதுமக்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது,

மேலும் அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அச்சத்தில் இருந்த நிலையில் அங்கு ஆடுமேய்க்க சென்ற பீர் முகம்மது என்ற நபரை ஆயுதங்களால் தாக்கியதாகவும், அதில் பீர்முகமது படுகாயம் அடைந்துள்ளதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது சம்பந்தமாக தென்காசி போலீசார் சாகுல்ஹமீது என்பவரை தீவீரமாக தேடி வந்தனர்.

sahul hameed - 2026

எனினும் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து பொத்தை குளம் பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் இடத்திற்குள் ஓடி மறைந்து இருந்ததாக தகவல்கள் தெரியவந்தது .

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

மேலும் இன்று காலை அப்பகுதிக்கு குளிக்க சென்ற பெண்களை மிரட்டியதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது, இந்த தகவலையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ண ராஜ் IPS, தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் ஆகியோரின் அறிவுரைப்படி தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் மேற்படி சாகுல் ஹமீது என்பவரை உடனடியாக கைது செய்ய ஆலோசனை செய்து பறக்கும் கேமரா வசதியுடன் ஆய்வாளர் திரு பாலமுருகன் தலைமையில் தனிப்பிரிவு தலைமைக்காவலர் முத்துராஜ், மாரியப்பன் குற்றப்பிரிவு காவலர்கள் அருள், கார்த்திக், அலெக்ஸாண்டர், பொன்ராஜ் மற்றும் சவுந்தரராஜ் ஆகியோர் உடனடியாக பச்ச நாயக்கன் பொத்தை பகுதிக்கு சென்று தேடி வந்தனர்.

tenkasi police - 2026

டிரோன் கேமரா உதவியுடன் பச்ச நாயக்கன் பொத்தை குளம் முழுவதும் தேடிய நிலையில் அங்கு குளத்தின் நடுவே நீருக்குள் படர்ந்திருக்கும் செடிகளுக்கு மத்தியில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,

உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் சினிமா பட பாணியில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அரிவாளுடன் பதுங்கி இருந்த சாகுல் ஹமீதை கைது செய்தனர்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி பட்டியலில் இருக்கும் சாகுல் ஹமீதை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் துணிச்சலாக கைது செய்த தென்காசி காவல் நிலைய போலீசாரை அப்பகுதி மக்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்,

மேலும் அவர் பதுங்கி இருந்த இடத்தை டிரோன் கேமரா மூலம் கண்டறிந்து காவல்துறையினர் துணிச்சலுடன் அங்கு சென்று சாகுல் ஹமீதை கைது செய்த வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர்.

Related articles

Recent articles

spot_img