இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை-மதுரை(காலை) மதுரை-செங்கோட்டை(மாலை) சாதாரண கட்டண பயணிகள் இரயில் விரைவில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.இதுபோல் மதுரை- செங்கோட்டை -மதுரை இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயிலை பயணிகள் ரயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளது.
மதுரை -செங்கோட்டை இடையேயான ரயில் சேவை கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதையடுத்து, இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை- செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க ப்பட்டு வருகிறது.
மதுரை – செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் (06504) மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் செங்கோட்டை- மதுரை விரைவு சிறப்பு ரயில் (06503) செங்கோட்டையிலிருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 12, சரக்கு மற்றும் காப்பாளா் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் எதிர் திசையில் செங்கோட்டை மதுரை செங்கோட்டை இடையே காலை மாலை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் இயக்காததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
இந்த ரயில் போலவே பல்வேறு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் இயக்கப்படாமல் இருந்தது.


தற்போது இந்த பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனாவால் தமிழகத்தில் நிறுத்தப்பட்ட 21பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கவும் தற்போது இயங்கும் சிறப்பு விரைவு ரயில்களில் சிலவற்றை பயணிகள் ரயிலாக இயக்கவும் மதுரை தேனி வழியில் புதிய பயணிகள் ரயில் இயக்கவும் தென்னக இரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.




