சென்னையில் இதுவரையில் மெட்ரோ ரெயில்கள் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வந்த நிலையில்
இன்று முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில்
காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.

சென்னையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இன்று முதல் இயக்கப்படுகிறது.
இதுவரையில் மெட்ரோ ரெயில்கள் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.




