gallerye 130612901 2985460 - 2026

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..

சற்றுமுன்

தமிழ்நாடு முழுவதும் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தென்மண்டல ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய அஸ்ரா கர்க் தென்மண்டல ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ்குமார் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரை மாநகர காவல் ஆணையராக ஐ.ஜி. டி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் அமலாக்கப்பிரிவு  ஐ.ஜி.யாக ஏ.டி.துரைக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ,

ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவலர்கள் நலத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்

மத்திய அரசு பணியில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ஆயுஷ்மணி திவாரிக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ்வர் தயாளுக்கும் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.மத்திய அரசு பணியில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி சுமித் சரணுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

gallerye 130612901 2985460 - 2026

பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக உள்ள அபின் தினேஷ் மொடக்குக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஐ.ஜி. சஞ்சய்குமார் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.என்.கே.செந்தாமரைக்கண்ணன் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஜி.யாக உள்ள வி.வனிதா பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னையில் ரயில்வே பணியில் ஏ.டி.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊர்காவல்படை கூடுதல் கமாண்டன்டாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் காவல்துறை நடவடிக்கைகள் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.