Mountain snake - 2026

சாலையைக் கடந்த மலைப்பாம்பு..! வைரல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
Mountain snake - 2026

சில வீடியோக்களை பார்த்தலே திகிலை உண்டாக்க கூடியதாக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், மிகவும்ஆபத்தான, மிகப்பெரிய மலைப் பாம்பு ஒன்று சாலையை கடந்து செல்வதைக் காணலாம்

வைரலாகி வரும் இந்த வீடியோவில் ராட்சத பாம்பு ஒன்று, சாலையை மெதுவாக கடந்து செல்வதை காணலாம். இந்த வீடியோவையும் ஐபிஎஸ் ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோ அசாமில் உள்ள ரங்பார் பகுதியில் உள்ள ராணுவப் பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் முப்பது வினாடிகள் கொண்ட வீடியோ, மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.

இரவில் வாகனம் ஒன்றில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ​​திடீரென ஒரு ராட்சத பாம்பு முன்னால் சாலையில் கடந்து செல்வதைப் பார்த்து அதனை வீடியோ எடுத்துள்ளார்.

காணொளியை பார்க்கும் போது, ​​அந்த பாம்பு சுமார் இருபத்தைந்து அடி நீளமும், 50 கிலோவுக்கு மேல் எடையும் கொண்டதாக இருக்கும் என்பது தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.