தமிழகத்தையே புரட்டிப்போட்ட விருதுநகர் பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து வேலுாரில், கேரளாவை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் ஆட்டோவில் கடத்தி நான்கு சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன் லைனில் வந்த புகார்படி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலுாரில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் உ.பி யை சேர்ந்த ஆண் நண்பருடன் கடந்த 19 ல் இரவு காட்பாடியிலுள்ள தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு நள்ளிரவு 1 மணிக்கு ஆட்டோவில் திரும்பினார். வேலுார் கிரின் சர்க்கிள் வந்தபோது, ஆட்டோவில் ஏற்கனவே இருந்த மூன்று பேர், ஆண் டாக்டரை தாக்கி கீழே தள்ளி விட்டு, பெண் டாக்டரை, சத்துவாச்சாரி பாலாற்றங்கரைக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பெண் டாக்டர் புகார் தர மறுக்கவே குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் சத்துவாச்சாரி போலீசார் திணறினர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஆன் லைனில் வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்த 18 வயதை சேர்ந்த நான்கு சிறுவர்களை கைது செய்தனர். ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.




