பேய் ஓட்டுவதாகக் கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய அப்துல் கனி! பள்ளிவாசலுக்குள் நடந்த பகீர் சம்பவம்!

Published:

Abdul hani - 2026

திட்டக்குடி அடுத்துள்ள பெண்ணாடத்தில் பேய் ஓட்டுவதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றவாளி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மேலும் அவரை பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.

Abdul hani 1 - 2026

இதனால் அந்த பெண்ணிற்கு பேய் பிடித்துள்ளதாக அவரது கணவர் நினைத்துள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் அறிவுறுத்தலின் பேரில் பேய் ஓட்டும் மந்திரவாதியிடம் மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

திட்டக்குடியில் இருந்து சக்திவேல் என்பவரின் மனைவி சின்னபொன்னு இரண்டு நாட்களாக யாரிடமும் பேசாமல் சுயநினைவு இன்றி மன அழுத்தத்தில் இருந்து வந்ததால் கடந்த 20ந்தேதி அன்று அவருடைய கணவர் பெண்ணாடம் பள்ளிவாசலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் பள்ளிவாசல் உள்ளது. அந்த பள்ளிவாசலில் அப்துல் ஹனி வயது 54 என்பவர் பில்லி சூனியம் ஏவல் போன்றவைகளை எடுப்பதாகவும். பேய் பிடித்தவர்களுக்கு பேய் ஓட்டும் தொழிலை பல வருடங்களாக செய்து வருகின்றார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

அங்கு அப்துல் ஹனி சின்னபொண்ணுவை பார்த்து இவருக்கு பேய் பிடித்துள்ளது. பேய் ஓட்ட வேண்டும் என்று கூறி பள்ளிவாசல் அருகே உள்ள அறைக்கு கூட்டி சென்று கதவை மூடி அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சின்ன பொண்ணு சத்தம் போடுவதை கேட்டு அவருடைய கணவன் சக்திவேல் ஜன்னல் வழியாக பார்த்த போது,

அவரது மனைவியின் தலையை தனது மடியில் வைத்து ஊதுபத்திகளை மூக்குக்கு அருகே காட்டியதும் அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பாலியல் சீண்டல் செய்வதாக தெரிவித்ததால் சக்திவேல் சத்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து சக்திவேல் தனது மனைவியை அங்கிருந்து அழைத்துச் சென்று பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணையில் அப்துல்ஹனி அந்த பெண்ணிடம் தவறாக நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் அப்துல்ஹனி தலைமறைவாகியுள்ளார்.

முதலில் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் அனுப்பி வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். பட்டியல் சமூக பெண்ணுக்கு எதிராக நடந்த கொடுமை மீது உள்ளூர் போலீசார் நடவடிக்கை மறுப்பதாக காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்ற நிலையில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட அப்துல் கனி மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செய்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

அப்துல்கனியை பிடித்து சம்பவ இடத்தில் நடந்தது என்ன ? என்று விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தான். போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரித்தனர்.

அதற்கு அந்தப்பெண் அவர் தனது காலை பிடித்து இழுத்தது வரை மட்டுமே நினைவிருப்பதாகவும் அதற்குள்ளாக தான் மயங்கி விட்டதாகவும், போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்துல்கனியை கைது செய்வதற்கு
தேவையான நடவடிக்கைகளை போலீசார்
மேற்கொண்டுள்ளனர்.

பள்ளிவாசலில் வைத்து, இல்லாத பேயை விரட்டுவதாக கூறி அப்பாவி பெண்ணின் வாழ்க்கையோடு விளையாட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related articles

Recent articles

spot_img