cricket 1 - 2026

ஆணை அவுட் ஆக்கிய பெண்.. பாராட்டிய சச்சின்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா விளையாட்டு
cricket 1 - 2026

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பெண்களும் ஆண்களும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே இந்தியாவிற்கென்று கிரிக்கெட் அணி இருந்தது. ஆனால் 1973 ஆம் ஆண்டு தான் இந்திய பெண்கள் கிரிக்கெட் அஸோஸியேஷன் தொடங்கப்பட்டது.

பின்பு 1976 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய பெண்கள் அணி முதன்முதலில் களத்தை கண்டது. எனினும் கிரிக்கெட் போட்டிகளில் ஆண்களை மட்டுமே கொண்டாடுகிறார்கள் என விமர்சனங்கள் பல எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ஒரு ஆண் பேட் செய்ய ஒரு பெண் பௌலிங் செய்கிறார். இறுதியில் அந்த ஆணை விக்கெட் இழக்க செய்கிறார் அந்தப்பெண்.

இந்த வீடியோவை டெண்டுல்கர் பகிர்ந்து அதில் “ஆணும் பெண்ணும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை பார்ப்பது அற்புதமாக உள்ளது. விளையாட்டு என்பது சமத்துவத்துக்குரியதாக தான் இருக்க முடியும். சமீபத்தில் இந்த காட்சியை மும்பை எம் ஐ ஜி கிளப்பில் பார்த்தேன்.வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள இந்த டிவீட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.