மதுரை ரயில்வே கோட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க கோரிக்கை..

மதுரை ரயில்வே கோட்டத்தில் கொரோனாவை காரணம் காட்டி
நிறுத்தப்பட்ட பயணிகள் மற்றும் விரைவு ரயில் சேவையை
மீண்டும் இயக்க பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா பரவலை காரணம் காட்டி கடந்த 2020 மார்ச் 21 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டுமென தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரைக் கோட்டத்தில் திருநெல்வேலி முதல் மயிலாடுதுறை இணைப்பு ஈரோடு வரை வந்து சென்ற பயணிகள் ரயிலானது நாள்தோறும் இயக்கப்பட்டு வந்தது. இந்த வண்டியானது, நெல்லையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து இரு ரயில்களாக திருச்சி வழியாக தஞ்சாவூர்,மயிலாடுதுறை வரைக்கும் சென்றது. திண்டுக்கல்லில் இருந்து கரூர் வழியாக ஈரோட்டிற்கும் இணைப்பு ரயிலாக இந்த வண்டி இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரயில் வண்டியை அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், புனித ஸ்தலங்களுக்கு செல்லக் கூடிய பக்தர்கள் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர்.இந்த பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுபோல் எர்ணாகுளம்-செங்கோட்டை-ராஜபாளையம்-வேளாங்கண்ணி இடையே வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு கொரோனா வா கடந்த இரு ஆண்டுகளாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது.

இதுபோல் செங்கோட்டை-மதுரை-செங்கோட்டை இடையே பகல் நேர பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.இந்த ரயிலும் இயக்குவதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மதுரை கோட்ட ரயில்வே யிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் தற்போது மதுரை-செங்கோட்டை-மதுரை இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில்களை மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றி இயக்கவும்,மதுரை-செங்கோட்டை-கொல்லம்-மதுரை இடையே நேரடி ரயில் இயக்கவும் புனலூர்-செங்கோட்டை-விருதுநகர்‌வழித்தடத்தில் நடைபெறும் மின்மயமாக்கும் பணிகள் விரைவில் முடிக்கவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

images 72 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories