ஈரோடு அருகே அடக்கம் செய்யப்பட்ட முதியவர் திரும்பி வந்ததால் பரபரப்பு..

ஈரோடு அருகே அடக்கம் செய்யப்பட்ட முதியவர் திரும்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் துறையம்பாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி கரும்பு வெட்டும் வேலை பார்த்து வருகிறார். இவர் கர்நாடகா, ஈரோடு போன்ற இடங்களில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று வருபவர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சென்ற மூர்த்தி வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். இதனால் அவரை தேடி மூர்த்தியின் மகன்கள் கார்த்திக், பிரபுகுமார் இருவரும் சுற்றித் திரிந்தும் கிடைத்தப்பாடில்லை.

இந்த நிலையில் கடந்த மார்ச் 31ம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே சுமார் 55 வயதுடைய ஆணின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக விரைந்துச் சென்றிருக்கிறார்கள் மூர்த்தியின் மகன்கள்.

ஆனால் முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அந்த சடலத்தின் உடலமைப்பு தங்களது தந்தையை போன்று இருந்ததால் அதனை கைப்பற்றி துறையம்பாளையம் கொண்டுச் சென்று உரிய சடங்குகளை செய்து அடக்கம் செய்திருக்கிறார்கள்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இதனால் தங்களது தந்தை இறந்துவிட்டதாக சோகத்தில் மூண்டிருந்த கார்த்திக், பிரபுகுமார் குடும்பத்தினருக்கு அன்றிரவே அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கூடிய சம்பவம் காத்திருந்திருக்கிறது.

அதன்படி இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி உயிருடன் திரும்பி வந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியுற்ற குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்திருக்கிறார்.

இதனிடையே இந்த சம்பவம் ஊர் முழுவதும் பரவியதால் உடனடியாக விரைந்து வந்தபோலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மூர்த்தி இறந்துவிட்டதாக நினைத்து அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கார்த்திக்கும் பிரபுகுமாரும் அடக்கம் செய்திருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலிஸார் அனுப்பியுள்ளனர்.

sathyamangalam - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories