திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி விழா ஏப் 16 இல்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 2.33 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 1.16 மணி வரையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி விழா
2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் 25லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சபூதத் தலங்களில் தேயு தலம் என்றும் நெருப்புத் தலம் என்றும் பயபக்தியுடன் போற்றி வணங்கப்படும் கோயில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். இத்தல இறைவனான சிவபெருமான் மலையாக இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருவதால், 14 கி.மீ சுற்றளவுள்ள அண்ணமலையை நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டுச் செல்வதுண்டு

images 32 1 - 2026

இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 2.33 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 1.16 மணி வரையாகும். இதனை முன்னிட்டு பல்வேறு சிறப்பு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் சித்ரா பவுர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவித்ததாவது,

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கவும், கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு கருவிகள், 24 மணி நேரம் மின்சார வசதி, அவசர மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏதுவாக 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 70 நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன. அன்னதானம் செய்ய விரும்புவோர் https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் மூலமாக வரும் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுதவிர பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வருவதற்கு வசதியாக சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, மதுரை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் சிறப்பு ரெயில் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை பக்தர்கள் தவிர்க்கவேண்டும். கிரிவலப் பாதையை பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories