மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானம்-தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்..

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக தீர்மானம் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், மொத்த மாணவர்களில் 80%க்கும் அதிகமான மாணவர்கள் மாநில பாடத் திட்டத்தில் பயில்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை பிரிவினரை சேர்ந்தவர்கள்.   சியுஇடி நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறையும். சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கிடாமல் நுழைவுத் தேர்வு மார்க்கை கணக்கில் கொள்வது ஏற்புடையதல்ல.நுழைவுத் தேர்வால் பள்ளிக்கல்விமுறையை ஓரம்கட்டி விட்டு பயிற்சி மையங்களை நாட வேண்டிய நிலை ஏற்படும்.பயிற்சி மையங்கள் புற்றீசல் போல வளர மட்டுமே நுழைவுத் தேர்வு சாதகமாக அமையும். சியுஇடி நுழைவுத் தேர்வு முறையும் நீட் தேர்வைப் போன்று பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் கற்றல் திறனை வெகுவாக குறைகிறது. நுழைவுத் தேர்வு, பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்காது மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வு வைப்பதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், என்றார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

இந்த தீர்மானத்துக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதுகுறித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ. கே.பி. அன்பழகன், நுழைவுத் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படைவார்கள். மேலும் வரும் காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகிவிடும் என்பதால் நுழைவுத் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. எனவே, மத்திய பல்கலைகழக நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், மத்தியப் பல்கலைகழகங்களில் வேண்டுமென்றால் நுழைவுத் தேர்வுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று உள்ளது. எனவே, மத்திய பல்கலைகழக நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். 

இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜக தவிர பிற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஒருமனதாக இந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!
images 35 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories