பஞ்சாங்க வாசிப்பு: அரசியல்வாதிக்கும், முக்கிய புள்ளிகளுக்கும் கண்டம்!

rameshwaram - 2026

உலகப் பிரசித்தி பெற்ற இராமநாதசுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் மற்றும் ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை முன்னிட்டு அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர் .

கோவில் சார்பாக ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கத்தை கோவில் குருக்கள் உதயகுமார் வாசிக்கப்பட்டதில் இந்த ஆண்டில் சுபகரன ஆண்டு பகலில் பிறக்கிறது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் தங்கரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி உற்சவத்திற்கு எழுந்தருளி ராமேஸ்வரம் நான்கு ரதவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் அக்னி தீர்த்தக்கரையில் ராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சநேயர், சுக்ரீவர் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில், நேற்று புத்தாண்டு என்பதால் அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இதனை அடுத்து, ராமர், சீதா,லட்சுமணன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, அங்கு குருக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ராமநாத சுவாமி சன்னதிக்கு அருகே குருக்கர்களின் முன்னிலையில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த பஞ்சாங்கத்தில் இந்தாண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதி ஒருவனுக்கும், முக்கிய புள்ளிகளுக்கு கண்டம் இருப்பதாகவும், கொரோனா போன்ற பெரும் தொற்று ஏற்படப்போகிறது என்று பஞ்சாங்க குறிப்பில் குருக்கள் வாசித்தார்.

மேலும்,பெட்ரோல்விலை உச்சத்தைத் தொடும். போக்குவரத்து மின்சார கட்டணம் கடுமையாக உயரும். புதிய வரிகளை விதிக்க அரசாங்கம் நேரிடும்,

தமிழ்ப் புத்தாண்டான நேற்று, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில், கோவில் குருக்கள் உதயகுமார், ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: வரும் அக்., முதல் டிச., வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி 12 பலவீனமாகி, ஏழு அதிதீவிர புயலாக வீசும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், நாகையில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

இதனால், விவசாயம் பாதித்தாலும் தென்னை, மா, பலா, வாழை விளைச்சல் நன்றாக இருக்கும். பெட்ரோல், டீசல் விலை மேலும் உச்சத்தை தொடும். கோவில் நகைகளை அரசு உருக்கி கருவூலத்தில் பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகும்.

சில அரசியல் தலைவர்கள் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை, புதிய தொழிலில் முதலீடு செய்து பெரும் நஷ்டத்தை சந்திப்பர். மேலும் இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் உருவாகக் கூடும்.

நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு சீனா, பாகிஸ்தான் பொறாமையில் பல சூழ்ச்சிகள் செய்யும். பின், அது பயனின்றி போகும். எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும்.

வெட்டுக்கிளிகளால் கோதுமை பயிர் நாசமாகும். மின்காந்த அலைகளால் மொபைல் போன் டவர் சேதமாகும். இந்திய கடல் வழியாக செல்லும் ஒரு வெளிநாட்டு சரக்கு கப்பல் நள்ளிரவில் தீக்கிரையாகும் அபாயம் உள்ளது.

புதிய வைரஸ் பரவி, மக்கள் காய்ச்சலில் பாதிக்கப்படுவர். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

இந்தாண்டு இரண்டு சூரிய சந்திர கிரகணம் வரும் சூரிய கிரகணம் 25 .10. 2022 செவ்வாய்க்கிழமை மாலை 5. 14 தொடங்கி 6 .10 வரை இருக்கும் சந்திர கிரகமானது 8 .12 .2022 செவ்வாய்க்கிழமை பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.39 வரை இருக்கும் என கோவில் பஞ்சாங்க வாசிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories