marriage - 2026

யோவ் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ கூட கடலை போடற.. கடுப்பான மணமகள்!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
marriage - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சமூக ஊடகங்களில் தினமும் பல திருமணங்களின் வீடியோக்கள் வெளிவருகின்றன. இந்த வீடியோக்களில் பெரும்பாலானவை மக்களை மகிழ்விப்பதற்காக தனித்தனியாக உருவாக்கப்பட்டவை.

திருமணத்தில், அனைவரது கவனமும் மணமகன் மற்றும் மணமகள் மீது இருக்கும். இவர்கள் என்ன செய்தாலும் அது நேரடியாக கேமராவில் பதிவாகும்.

பெரும்பாலும் மணமக்கள் மறைக்க நினைக்கும் சில விஷயங்களும் கேமராவில் சிக்கி விடுவது உண்டு. திருமணத்தில் உள்ள பலரின் கவனம் மணமக்கள் மேல் இருந்தாலும், மணமகன் கவனம் மணமகள் மீதும், மணமகள் கவனம் மணமகன் மீதும் இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்.

அப்படி இல்லாமல் போனால் என்ன நடக்கும்? இதற்கு விடை அளிக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்திற்கு பிறகு மணமக்கள் மேடையில் அமர்ந்துள்ளதை காண முடிகின்றது.

மணமகன் அருகில் மற்றொரு பெண் அமர்ந்திருக்கிறார். மாப்பிள்ளை அவரிடம் பேச ஆரம்பித்து, தொடர்ந்து அவரிடமே பேசிக்கொண்டு இருக்கிறார்.

இதைப் பார்த்து மணமகள் கடுப்பாவதை வீடியோவில் காண முடிகின்றது. மணமகள் மாப்பிள்ளையை தட்டி அவரை தன் பக்கம் திரும்ப வைக்க முயற்சிக்கிறார். ஆனால், மாப்பிள்ளை அதை கண்டுகொள்ளாமல் மற்றொரு பெண்ணிடமே பேசிக்கொண்டு இருக்கிறார்.

மணமகள் கடுப்பாகி மணமகனை அழைப்பதையும், மணமகன் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் திருமணத்திற்கு வந்த அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

திருமணத்தின் இந்த வீடியோவில், மணமகள் மணமகனை மீண்டும் மீண்டும் தன் பக்கம் திரும்ப வைக்க முயற்சிப்பதை காண முடிகின்றது. அவரது இந்த கியூட் கடுப்பு இணையவாசிகள் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ unzip.world என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு 10 லட்சத்தை விட அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. பல வித கமெண்டுகளையும் மக்கள் அள்ளி வீசி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.