திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் சரியான தகவல் தருபவர்க்கு ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29 ம் தேதி, திருச்சியில், தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் மரம் நபர்களால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சிறப்பு புலனாய்வுக் குழுவில் புலன் விசாரணையில் உள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடமிருந்து குறுஞ்செய்தி மூலமாக, அவ்வப்போது தகவல்கள் பெறப்பட்டு வருகிறது. பெறப்பட்ட தகவலை இக்குழுவானது தீவிர விசாரணை செய்து வருகிறது. எனவே, இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால், 9080616241,9498120467 மொபைல் எண்களிலும்,7094012599 (வாட்ஸ்ஆப்) மற்றும் sitcbcidtri@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வழக்கை துப்பு துலக்க சரியான தகவல் தருபவர்க்கு ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.





