
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. மலிவு விலை, ப்ரீமியம் விலை, பட்ஜெட் விலை என பல்வேறு விலைப்பிரிவுகளில் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.
குறிப்பாக ஒரு சில நிறுவனங்கள் சாதனங்களில் தனித்துவ மற்றும் மேம்பட்ட அம்சங்களோடு வடிவமைப்பையும் கவனித்து சிறப்பாக அறிமுகம் செய்கிறது.
ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் இந்தியாவில் தொடங்கப்பட்டது. மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மாஸ் ஆதரவுடனான இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பிற அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
மோட்டோரோலா நிறுவனம் ஐரோப்பாவில் மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போனானது ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பு, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, டால்பி அட்மாஸ் ஆதரவோடு கூடிய இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் 50 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று கேமரா அமைப்பு என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.
மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது.
ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. இந்த மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது.
மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 37.9 மணிநேர பேக்அப் வசதியை வழங்குகிறது.
மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் உடன் கிடைக்கிறது.
மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை 249 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மதிப்பு ரூ.20,600 ஆக இருக்கிறது. மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது சார்கோல் க்ரே, பீங்கான் வைட் என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய சந்தைகளில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. அதேபோல் மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது விரைவில் இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் வரவிருக்கும் வாரங்களில் விற்பனைக்கு வரும் என மோட்டோரோலா உறுதிப்படுத்தியுள்ளது.
மோட்டோ ஜி52 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது நானோ அம்சத்தோடு கூடிய இரட்டை சிம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயக்க பயன்முறையுடன் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080×2,400 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு 90 புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. 402 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 87.70 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தைக் கொண்டிருக்கிறது.
ஹூட்டின் கீழ் மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி அட்ரீனோ 610 ஜிபியூ மற்றும் 4 ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது.
மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது ஒற்றை எல்இடி ஃப்ளாஷ் உடனான டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் வருகிறது.
நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், லைவ் போட்டோ மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தை இந்த கேமரா அம்சம் கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் ஆதரவுக்கு என முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் வசதி
மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இந்த சாதனம் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது.
மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், வைஃபை 802.11, ப்ளூடூத் வி5, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய ஆதரவோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் வசதி பொருத்தப்பட்டிருக்கிறது.
புதிய மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.
இதன்மூலம் இந்த சாதனத்தை சார்ஜ் செய்தால் 37.9 மணிநேர வரையிலான ப்ளேபேக் நேரத்தை வழங்குகிறது. இந்த சாதனத்தில் ஐபி52 ஆதரவைக் கொண்டிருக்கிறது.
இதன்மூலம் சாதனத்தை தூசி மற்றும் நீர் எதிர்ப்பு தன்மையை வழங்குகிறது. மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் கூடிய இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் அம்சம் இருக்கிறது. மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் எடை 169 கிராம் ஆகும்.





