இராணுவத்திற்காக அதிகம் செலவழித்த நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
military 3May - 2026
military 3May

கடந்த 2021ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ராணுவத்திற்காக சுமார் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகை செலவிட்டிருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது

உலக வரலாற்றிலேயே ராணுவத்திற்காக இத்தனை பெரிய தொகை செலவிடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 2021ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் ராணுவத்திற்காக செலவிடப்படும் மொத்த தொகையில் சுமார் 0.7 சதவிகிதம் உயர்வு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்கா, சீனா, இந்தியா, யு.கே, ரஷ்யா ஆகிய நாடுகள் ராணுவத்திற்கு அதிக தொகையை செலவு செய்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த 5 நாடுகள் தங்கள் ராணுவங்களுக்காக மேற்கொண்டிருக்கும் மொத்த செலவு உலகம் முழுவதும் ராணுவத்திற்காக மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவுத் தொகையில் சுமார் 62 சதவிகிதம் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.