ஒரே சமயத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து இந்தியா கின்னஸ் புத்தகத்தில் இடம்!

Published:

Guinness World Record - 2026

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்திலுள்ள தலார் மைதானத்தில் சென்ற 23ஆம் தேதி வீர் குன்வர் சிங் விஜயோத்சவ் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சயில் ஒரே சமயத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து இந்தியா தன் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இருந்தார். இம்முயற்சியினை கின்னஸ் உலகசாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள் நேரில் பார்த்தனர்.

இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியிருப்பதாவது “சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் பாபுவீர் குன்வர் சிங்கின் பிறந்தநாளின் போது ஜகதீஷ்பூரில் இந்திய தேசியக் கொடி 5 நிமிடங்களுக்கு அசைக்கப்பட்டது.

இதன் வாயிலாக ஆசாதி கா அம்ரித் மஹோத்சங் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 78,220 நபர்கள் தேசியக் கொடியை அசைத்தனர். இவ்வாறு ஒரே நேரத்தில் தேசியக் கொடிகளை அசைத்தது புதிய உலக சாதனை ஆகும்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

ஆகவே பீகார் மக்கள் தானாக முன் வந்து ஒரே இடத்தில் இவ்வளவு பெரிய கொடிகளை அசைத்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும்” என்று அவர் கூறினார்.

Related articles

Recent articles

spot_img