இந்தியாவில் சில மாநிலங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் அனல் காற்று வீசக்கூடும்.
சராசரி வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகும் எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.அனல் காற்று வீசக்கூடும் என்பதால் 5 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
