தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை இந்த ஆண்டு வரும் ஜூலை 17-ந்தேதி நடத்த முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியானது முதல் பிளஸ்-2 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். மே மாதம் 6-ந்தேதி இரவு வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 9 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மே 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது. அன்று இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கவும் இரவு 11.50 மணிவரை விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
விண்ணப்ப விவரங்கள், தேர்வு அறை நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்.டி.ஏ. வலைதளம் மூலமாக விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






