பிப்.15ல் கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வர உள்ள நிலையில், நினைவு மண்டபத்திற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.

சென்னை:

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் பிப்.15ம் தேதி வியாழக்கிழமை கூட உள்ளது.

இந்தக் கூட்டத்தில், பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்க உள்ள நிதி, மானியக்கோரிக்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து, கருத்து கேட்கப்பட உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அரசின் சாதனைகள் தொடர்பாக ஆண்டு மலர் வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வர உள்ள நிலையில், நினைவு மண்டபத்திற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.