sapathi - 2026

டிஷ்யூவா இது… அதிர்ச்சி கொடுத்த முதியவர்..!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
sapathi - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பெரும்பாலான கிராமங்களில் இன்றும் பஃபே முறைக்கு பதிலாக, மேஜைகளில் உணவு பரிமாறப்படுகிறது. மக்கள் அதை மிகவும் விரும்புகிறார்கள்.

இருப்பினும், பல இடங்களில், நகரத்தைப் போலவே, கிராமங்களிலும் பஃபே முறையின் போக்கு காணப்படுகிறது. சில நேரங்களில், உணவு உண்ணும் போது பல வேடிக்கையான சம்பவங்களும் நடப்பதுண்டு.

இவற்றை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. நாம் நினைத்துகூட பார்க்க முடியாத ஒரு வேலையை செய்யும் ஒரு முதியவரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், திருமணம் ஒன்று நடப்பதையும், அதில் திருமண விருந்து நடந்துகொண்டிருப்பதையும் காண முடிகின்றது.

அனைவரும் ருசியான உணவை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். மேஜையில் அமர்ந்துள்ள ஒரு முதியவர் அனைத்து பண்டங்களையும் ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

சாப்பிட்டு முடித்து கையைத் துடைக்கும் நேரம் வந்ததும் அந்த முதியவர் மிக வினோதமாக நடந்து கொள்வதை வீடியோவில் காண முடிகின்றது.

அவர் சப்பாத்தியை டிஷ்யூ பேப்பராக கருதி வாயை சுத்தம் செய்து கொள்கிறார். இந்த வீடியோவை பார்ப்பவர்களால் அவருடைய செயலைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது. இந்த வீடியோவுக்கு பல்வேறு விதமான கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன.

சமூக வலைதளவாசிகளும் முதியவரின் இந்த செயலால் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த வீடியோவை பார்ப்பவர்களால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை.

பெரும்பாலான பயனர்கள் இதன் கமெண்ட் பாக்சில் சிரிக்கும் ஈமோஜிகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோ sensen4947 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ் கிடைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.