பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

Published:

rrr - 2026

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

இந்தியா ரிலீசாக 5 மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகப் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் தெலுங்கு பேசும் மாநிலங்களின் சில பகுதிகளில் இன்னும் கூட ஓடிக்கொண்டிருக்கிறது.

தெலங்கானாவில் பள்ளி ஆங்கிலத் தேர்வின் வினாத்தாளில் இப்படம் பற்றிக் கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது.
அதில் ​​’ஆர்.ஆர்.ஆர்’ படத்தையும், அதில் கொமரம் பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பையும் பார்த்திருப்பீர்கள்.

rrr qus - 2026

இந்நிலையில், பிரபல டிவி சேனலில் நீங்கள் நிருபராக இருக்கும் பட்சத்தில், ஜூனியர் என்.டி.ஆரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் அதில் எந்த மாதிரியான கேள்விகளை நீங்கள் கேட்பீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

பள்ளித் தேர்வில் ஆர்.ஆர்.ஆர் படம் பற்றிக் கேட்கப்பட்டுள்ள அந்த வினாத்தாள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

இப்படத்தின் தென்னிந்திய மொழிப் பதிப்புகள் வருகிற 20ஆம் தேதி ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளன. இதன் இந்திப் பதிப்பு அதே தேதியில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது. மே 20ஆம் தேதி நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள்

Related articles

Recent articles

spot_img