கணவரை கொலை செய்து புதைத்த மனைவி-9 மாதங்களுக்கு பின் இன்று கைது..

Published:

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து புதைத்த மனைவியை போலீசார் 9 மாதங்களுக்கு பின்னர் கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை தேடி வருகின்றனர். மேலும் புதைக்கப்பட்ட சடலத்தை தாசில்தார், போலீசார் முன்னிலையில் இன்று தோண்டிஎடுத்து பரிசோதனை செய்ய உள்ளனர். கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த எஸ்.புதுக்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (46). இவரது மனைவி விஜயலட்சுமி (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் விஜயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் ராஜசேகர் இல்லாத போது விஜயலட்சுமியும், மோகனும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது ராஜசேகருக்கு தெரியவந்ததும், அவர் மனைவியை கண்டித்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ராஜசேகரை கடந்த 9 மாதத்துக்கு முன்பு கள்ளக்காதலன் மோகனுடன் சேர்ந்து அடித்து கொலை செய்து வீட்டின் அருகில் இருந்த மீன் குட்டையின் ஓரத்தில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

குழந்தைகள் கேட்டபோது விஜயலட்சுமி, அப்பா வெளியூருக்கு வேலைக்கு சென்றுள்ளதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் விஜயலட்சுமியின் தம்பி சிவக்குமார் மாமா எங்கே என்று கேட்டபோது கோபமடைந்த விஜயலட்சுமி உனக்கு இனி மாமா மோகன் தான்.  ராஜசேகரை அடித்து கொலை செய்து புதைத்து விட்டதாக கூறியிருக்கிறார். இதுபற்றி சிவக்குமார் மூலம் தகவலறிந்த ராஜசேகரின் உறவினர்கள் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், தானும் மோகனும் சேர்ந்து ராஜசேகரை அடித்து கொலை செய்து புதைத்ததை விஜயலட்சுமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மோகனை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே மீன்குட்டை அருகே புதைக்கப்பட்ட ராஜசேகரின் சடலம் பண்ருட்டி தாசில்தார் முன்னிலையில் இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ராஜசேகரை 9 மாதத்துக்கு முன்பு கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்து கொலை செய்து வீட்டின் அருகில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். குழந்தைகள் கேட்டபோது விஜயலட்சுமி, அப்பா வெளியூருக்கு வேலைக்கு சென்றுள்ளதாக கூறி வந்துள்ளார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
IMG 20220530 172956 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img