22 வயது பாடகர் மரணம்.. அதிர்ச்சி!

Published:

shell sagar - 2026

தில்லியைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளரும், பாடகருமான ஷீல் சாகரின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக திரையுலக சார்ந்த பிரபலங்களின் தொடர் மரணங்கள் அந்த துறைக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. கொரோனா தொற்றால் பல பிரபலங்கள் மரணமடைய, தற்போது மாரடைப்பு உட்பட பல காரணங்களால் அடுத்தடுத்து திரைத்துறையில் மரண நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகிறது.

பன்முக மொழிகளில் சிறந்த பாடகராக வலம் வந்த கே.கே. எனப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மே 31 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.

இதனிடையே (ஜூன் 2) பிரபல சந்தூர் இசைக்கலைஞர் பஜன் சோபோரி உடல் நலக்குறைவால் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.

இப்படி அடுத்தடுத்த மரணங்கள் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் தில்லியைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளரும், பாடகருமான ஷீல் சாகர் ஜூன் 1 ஆம் தேதி மரணமடைந்துள்ளதாக அவரது நண்பர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

22 வயதாகும் ஷீல் சாகர் கடந்தாண்டு தில்லியில் நடைபெற்ற இண்டிபென்டண்ட் இசை விழாவில் ‘If I Tried’ என்ற பாடல் மூலம் பிரபலமானார்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

இந்த பாடல் Spotify செயலியில் மட்டும் 40 ஆயிரம் ஸ்டிரீம்களை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘Before It Goes’, ‘Still’ and ‘Mr. Mobile Man – Live’ போன்ற பாடல்களை அவர் வெளியிட்டார்.

பாடகர் மட்டுமல்லாமல் பியானோ, கிட்டார், சாக்ஸ்போன் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதிலும் ஷீல் சாகர் திறமை வாய்ந்தவர். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஷீல் சாகரின் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img