images 60 - 2026

சதுரகிரி கோவிலில் ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு ஜூலை 11முதல14- வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி

சற்றுமுன்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஜூலை14-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்குக்கும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

images 60 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.