



இந்தியாவில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருஆடிப்பூர தேரோட்ட உற்சவம் இன்று பக்தர்களின் கோபாலா கோவிந்த கோஷம் முழங்க வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் துவங்கியது . வரும் ஆக 1ம் தேதி திரு ஆடிப்பூரம் நாளில் திரு தேரோட்டம் இரு ஆண்டுகள் கழித்து வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் வைணவ திருத்தலங்களில் முக்கியத்துவம் பெற்ற ஊராகும் வைணவ ஆழ்வார்கள் 12 பேர்களில் பெரியாழ்வார் ஆண்டாள் ஆகிய இரண்டு ஆழ்வார்கள் ஒருசேர அவதரித்த புண்ணிய பூமியான இங்கு ஆண்டாளை துளசி செடிக்கு கீழ் பெரியாழ்வார் கண்டெடுத்த நாளான ஆடிப்பூரத்தன்று ஆண்டாளும் ரங்க மன்னரும் பெரிய திருத்தேரில் எழுந்தருள பக்தர்கள் ஜாதி மத வேற்றுமை இல்லாமல் நிலையம் கொண்டு வந்து சேர்க்கும் தேர் திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது .
கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருத்தேரோட்டம் நடைபெறவில்லை இந்த ஆண்டு ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நேற்று 24 ஆம் தேதி காலை வெகு உற்சாகத்துடன் துவங்கியது இதனை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரங்கள் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் க்கு செய்யப்பட்டு கொடி பட்டம் நகர்வலம் வந்து கோயில் சந்நிதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் வைபோகம் வேத பாராயண முறைப்படி நடைபெற்றது.
காலை 9 45 மணிக்கு கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் கொடியை ஏற்றி வைத்தார் தொடர்ந்து கொடிமரத்திற்கும் புனித நீர் அபிஷேகங்கள் தீபாராதனைகள் காட்டப்பட்டது கொடியேற்று விழாவின் போது கோயில் தக்கார் ரவிச்சந்திரன் மதுரை இணை ஆணையர் செல்லதுரை கோயில் செயல் அலுவலர் முத்துராஜா தலைமை அர்ச்சகர் வாசுதேவப்பட்டர் ஸ்தானிகம் ரெங்கராஜன் என்ற ரமேஷ் கோவில் மணியம் கோபி வேதபிரான் சுதர்சன் கிச்சப்பன் வெங்கடேசன் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திருவிழா நாட்களில் ஆண்டாளும் ரெங்க மன்னரும் காலை இரவு வேலைகளில் ரத வீதிகள் வழியே உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வாக
ஜூலை 30 இரவு 07:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் சயன திருக்கோலம் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவடிப்பூர தேரோட்டம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 9.5 மணிக்கு துவங்குகிறது .ஆகஸ்ட் 1-இல் அதிகாலை மூலவர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு திருமஞ்சன அபிஷேகம் அலங்காரம் பூஜை நடத்தி திருத்தேரில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி
காலை 09:05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடக்கிறது.
தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மருத்துவ வசதி குடிநீர் வசதி அன்னதானம் போலீஸ் பாதுகாப்பு ஆகியவை சிறப்பாக கோயில் நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது திருவிழா துவங்கிய தினமும் மாலை முதல் இரவு வரை ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவுகள் இன்னிசை நிகழ்ச்சிகள் பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் மதுரை அறநிலைத்துறை இணை ஆணையர் செல்லதுரை செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்துள்ளனர் .
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நடைபெறவில்லை இந்த ஆண்டு மீண்டும் புதுப்பொலிவுடன் நடைபெறுவதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் பெருவாரியாக கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர் கொடியேற்றத்தை தொடர்ந்து சன்னதிக்குள் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த ஆண்டாள் ரெங்க மன்னாரை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்