


அருப்புக்கோட்டை அருகே இன்று நின்றிருந்த வேன் மீது கார் மோதியதில் சிறுவன் உள்பட மூவர் பலி.11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி நான்கு வழிச்சாலையில் நின்றிருந்த வேன் மீது பின்னால் வந்த கார் மோதியதில் மூன்று வயது சிறுவன் உள்பட மூவர் பலியாகினர் 11 பேர் காயம் அடைந்தனர் ராமநாதபுரம் மாவட்டம் கழுவன் பொட்டலைச் சேர்ந்தவர் சரத்குமார் இவர் தனது மனைவி லட்சுமி மகன் மதிமாறன் உள்பட 16 பேர்களை சரக்கு வேணில் ஏற்றுக்கொண்டு விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊர் திரும்புகையில் மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருக்கும்போது வேலாயுதபுரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் அனைவரும் டீ சாப்பிட்டு விட்டு மீண்டும் வேனில் ஏறி கிளம்பும்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் மின்னல் வேகத்தில் வேனில் மோதியது.
இதில் வேனில் வந்த சரத்குமாரின் மகன் மதிமாறன் மற்றும் அவரது உறவினர் புவித்ரா பெருமாள் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மேலும் 11 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்





