புயல் செய்திகள்: முறிந்து விழுந்த 350 மரங்கள்! போக்குவரத்து பாதிப்பு!

Published:

500x300 1804382 mandas - 2026

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. இன்று காலையில் மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றால் மின்சார கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. சாலைகளின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது…


மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயல்

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்துள்ளது

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. அதற்கு மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டது.

முதலில் தீவிர புயலாக இருந்த மாண்டஸ் பின்னர் புயலாக மாறி வடக்கு கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே டிசம்பர் 9ந்தேதி இரவு முதல் 10ந்தேதி அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இரவு சுமார் 9.45 மணி அளவில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கியது. முதலில் வெளிப்புறப் பகுதி பின்னர் மையப்பகுதி அதன் பின்னர் வால் பகுதி என மூன்று கட்டங்களாக மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது.

இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாண்டஸ் புயல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே முழுமையாகக் கரையை கடந்து முடித்தது.

சுமார் ஐந்தரை மணி நேரமாக புயல் கரையைக் கடந்து முடித்தது.

புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறின.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

புயல் கரை கடந்து முடிந்துள்ள நிலையில் இனி படிப்படியாக வலுவிழக்கும் என்றும், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவிழந்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அது வலுவிழக்கும் என தென்மண்டல ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புயல் செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலியாக நள்ளிரவில் சென்னை வந்த 7 விமானங்கள் ஐதராபாத், பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன

சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 20 விமானங்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு காலதாமதமாக புறப்பாடு

2வது நாளாக திருவனந்தபுரம், தூத்துக்குடி, திருச்சி, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய 6 விமானங்கள் ரத்து

350 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்துள்ளன”

சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக 300-350 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.

முறிந்த மரங்களை அகற்றும் பணியில் காலை முதல் 30,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலைக்குள் அனைத்தும் அகற்றப்படும் என்று- சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்…

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img