செல்ஃபி மோகத்தால் நிகழ்ந்த விபரீதம்..

1029796 marriage eve 1 - 2026

கேரள மாநிலம் கொல்லம் அருகே செல்ஃபி மோகத்தால் குவாரியின் மேல் பகுதியில் நின்றவாறு செல்பி எடுத்து‌கீழே விழுந்த மணப்பெண்.சினிமாவை மிஞ்சும் சம்பவமாக டூப் இல்லாமல், வாலிபர் தனது வருங்கால மனைவியை 150 உயரத்தில் இருந்து பாறைக்குழிக்குள் குதித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (வயது 25). இவருக்கும், கல்லுவாதுக்கலையை சேர்ந்த சாந்திராவிற்கும் (19) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களுக்கு நேற்று அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.

1029796 marriage eve - 2026

இந்தநிலையில், திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் மணமக்கள் இருவரும் காலையில் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பகல் 11 மணியளவில் பாரிப் பள்ளி வேளமானூர் காட்டுப்புரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர். அந்த குவாரியில் 150 அடி உயரத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளித்தது. அந்த இடத்தை பார்த்ததும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். இருவரும் குவாரியின் மேல் பகுதியில் நின்றவாறு செல்பி எடுத்தனர். அப்போது திடீரென்று சாந்தி்ரா கால் வழுக்கி 150 அடி உயரத்தில் இருந்து குவாரியில் தேங்கிநின்ற தண்ணீருக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தார்.

இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட வினு கிருஷ்ணன் உடனடியாக குவாரியில் இருந்த தண்ணீருக்குள் குதித்தார். பின்னர் தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்த தனது வருங்கால மனைவி சாந்திராவை காப்பாற்றினார். சாந்திராவின் உடையை பிடித்து இழுத்து பாறையின் ஒரு பகுதிக்கு வினு கிருஷ்ணா கொண்டு வந்தார்.

அதனைத்தொடர்ந்து இருவரும் குவாரி பாறையை பிடித்துக்கொண்டு காப்பாற்றுங்கள்…காப்பாற்றுங்கள்.. என்று சத்தம் போட்டனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் ரப்பர் வெட்டும் பணி செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து கயிற்றை இறக்கி பாதுகாப்பாக பிடித்து கொள்ளுமாறு கூறினர். பின்னர் குழாய் மூலம் கட்டப்பட்ட சிறு தோணியில் தொழிலாளர்கள் இறங்கி இருவரின் அருகே சென்று முதலுதவி செய்தனர். இதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

லேசான காயங்களுடன் இருவரும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக நேற்று நடைபெறுவதாக இருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. துபாயில் பணி செய்துவரும் வினு கிருஷ்ணன் திருமணத்திற்காக 2 வாரங்களுக்கு முன்னர் தான் சொந்த ஊருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவை மிஞ்சும் சம்பவமாக டூப் இல்லாமல், வாலிபர் தனது வருங்கால மனைவியை 150 உயரத்தில் இருந்து பாறைக்குழிக்குள் குதித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

1029796 marriage eve 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories