சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு..

Copy of 1 Frame 10 7 16721328503x2 1 - 2026
சபரிமலை ஐயப்பனுக்கு நடந்த மண்டல பூஜை வழிபாடு
FB IMG 1671680564499 1 - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த ஆண்டு சபரிமலையில் இதுவரை ரூ.222 கோடியே 98 லட்சம் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை களுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் பெற்று வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது. கடந்த 39 நாட்களில் சபரிமலையில் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேர் தரிசனம் பெற்றுள்ளனர். இவர்களில் 6 லட்சம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு இதுவரை ரூ.222 கோடியே 98 லட்சம் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.70 கோடி பிரசாதமாக பெறப்பட்டுள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

நடை திறக்கப்பட்டு 41 நாட்கள் ஆன நிலையில், இன்று மண்டல பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதற்காக அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடந்தன. களபாபிஷேகத்திற்கு பிறகு பகல் 12.30 மணிக்கு பிரசித்தி பெற்ற மண்டல பூஜைகள் நடைபெற்றன. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன. அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழங்கியபடி தரிசனம் செய்தனர். மண்டல பூஜை வழிபாட்டையொட்டி பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னதாக நேற்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இன்று இரவு ஹரிவராசனம் பாடலுக்கு பிறகு கோவில் சன்னதி மூடப்படுகிறது. தொடர்ந்து மகர விளக்கு வழிபாட்டுக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories