மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு..

FB IMG 1672370143818 - 2026
FB IMG 1672414820535 - 2026
FB IMG 1672409039928 - 2026

பக்தர்கள் சரணஹோசம் முழங்க மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

சபரிமலையில் 41 நாள் நீண்ட மண்டல காலம் கடந்த 27ம் தேதி நடைபெற்ற பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. கடந்த 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடை மூடப்பட்டிருந்தது. இந்தநிலையில் மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.தந்திரி கண்டரரு ராஜீவரரு நடையை திறந்து ஐயப்பனின் தவகோலத்தை களைந்து தீபமேற்றி வைத்தார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாமல் இரவு நடை அடைக்கப்பட்டு நாளை (31ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கும்.

நாளை முதல் கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். 20ம் தேதி காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மண்டல மகரவிளக்கு காலம் நிறைவடையும். 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 18ம் தேதியுடன் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடையும். பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி ஜனவரி 11ம் தேதி நடைபெறுகிறது.மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம்.

இந்த திருவாபரணம் ஜனவரி 12ம் தேதி பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்படும். 14ம் தேதி மாலை 6.30 மணி அளவில் திருவாபரண ஊர்வலம் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். இன்று தரிசனத்திற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், நாளை (31ம் தேதி) 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் முன்பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories