தமிழக ஆளுநரின் உரைக்கு பேரவையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் அவையிலிருந்து பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.
தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தையை படிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாடு என்று வார்த்தை இடம்பெற்ற ஒவ்வொரு வாசகத்தையும் ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்துவிட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக இந்த அரசு என்று ஆர்.என். ரவி குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்று பேரவையிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.ஆளுநரின் உரைக்கு பேரவைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆளுநரின் செயலை முதல்வர் பேரவையிலேயே விமரிசித்துப் பேசினார். இதனால், முறையாக தேசிய கீதம் இசைத்து கூட்டம் முடிப்பதற்கு முன்னதாக பாதியிலேயே அவையிலிருந்து ஆளுநர் புறப்பட்டுச் சென்றார்.
தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை. அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்று பேரவையிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.ஆளுநரின் உரைக்கு பேரவைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், ஆளுநரின் செயலை முதல்வர் பேரவையிலேயே விமரிசித்துப் பேசினார். இதனால், கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆளுநர் புறப்பட்டுச் சென்றார்.
அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் பேரவையில் முதல்வர் அதிரடியாகத் தீர்மானம் கொண்டுவந்தார்.






