December 6, 2025, 9:33 AM
26.8 C
Chennai

ஆற்றுக்கால் பகவதி கோவில் பொங்காலா விழா துவங்கியது..

FB IMG 1677473029021 - 2025
Dinamalar tamil news

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலா விழா இன்று பிப் 27ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 7ம் தேதி பல லட்சம் பெண்கள் பொங்கலிட்டு தேவிக்கு வழிபாடு நடத்தும் பொங்கலா விழா நடக்கிறது.இரண்டு ஆண்டு கொரோனா அச்சத்தால் வீட்டில் பொங்கல் இட்ட பெண்கள் இந்த ஆண்டு கோயிலில் குதுகுலத்துடன் பொங்கல் இட உள்ளனர் .

FB IMG 1677473041777 - 2025

திருவனந்தபுரத்தில் பிரசித்திபெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை திருவிழா இன்று பிப் 27ம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியியுடன் துவங்கியது.அதைத்தொடர்ந்து திருக்கொடியேற்றமும் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

முதல் நாள் விழாவான இன்று கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தலில் தோற்றம்பாட்டு என்ற கண்ணகி தேவி வரலாறு பாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் பாடப்படும் வரலாற்று பாடலுக்கு ஏற்பஅன்றைய தினம் பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும். பொங்காலை நடைபெறும் மார்ச் 7ம் தேதி கண்ணகி தேவி பாண்டியமன்னனை வதம் செய்து வெற்றியுடன் ஆற்றுகால் தலத்துக்கு வருகை தந்து குடியிருக்கும் பாடல் பாடப்படுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான குத்தியோட்டம், தாலப்பொலி நிகழ்வுக்காக திருவிழாவின் மூன்றாம் நாள் குழந்தைகள் விரதம் தொடங்குகின்றனர்.

FB IMG 1677473046685 - 2025

முன்பு 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 10 வயது முதல் 12 வரை உள்ள 743 சிறுவர்கள் குத்தியோட்டம் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். ஒப்பதாம் நாள் விழா அன்று மாலையில் சிறுவர்களை மிக அழகாக அலங்கரித்து தேவியின் திருநடை முன்பு அழைத்துவருவார்கள். அம்மன் வீதி உலா செல்லும் சமயத்தில் சிறுவர்களின் விலாவின் இரண்டு பகுதிகளிலும் கொக்கி போன்ற உலோகத்தை குத்திக்கொள்வார்கள்.

அம்மன் வீதியுலா முடிந்து மீண்டும் ஆலயத்துக்குள் வந்ததும் விலா பகுதியில் உள்ள உலோககொக்கிகள் அகற்றப்படும். இந்த நிகழ்வு குத்தியோட்டமாகும்.

மார்ச் 7-ம் தே தி பிரசித்திபெற்ற ஆற்றுகால் பொங்காலை விழா நடைபெறஉள்ளது. காலை சுத்த புண்யாக சடங்கை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பண்டாரஅடுப்பில் தீ மூட்டப்படுவதை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்காலையிடுவார்கள்.

2020ம் ஆண்டு பொங்காலை விழாவில் 30 லட்சம் பெண் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா பெரிய அளவில் நடைபெற வில்லை. அவரவர் வீடுகளில் பக்தர்கள் பொங்கலிட்டனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுவதால் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்காலை யிடுவார்கள் என எதிர்பார்ப்பாக உள்ளது. . திருவிழா தொடங்கும் இன்று மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளை சினிமா நடிகர் உண்ணி முகுந்தன் தொடங்கி வைக்கிறார்.

FB IMG 1677473033747 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories