

திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இதில், திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 40 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக- திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி 36-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக பின்தங்கியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்த என்.பி.பி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.





