
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒரு ஏகே ரைபிள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கியையும் பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அடுத்த இரண்டு நாள்களுக்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வந்துள்ள நிலையில் பாதுகாப்புப்படையினர் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
முன்னதாக நேற்று குப்வாரா பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.





