
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அத்துமீறல்! தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை கலெக்டராக வந்த மெர்ஸி ரம்யா தனது அரசு குடியிருப்பில் கடந்த 60ஆண்டுகளாக இருந்த விநாயகர் கோவிலை அப்புறப்படுத்தி உள்ளார். கலெக்டர் பதவி என்பது நிரந்தர பதவி அல்ல என்பதை அவர் உணரவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியருக்கான குடியிருப்பு புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு சொந்தமானது. ஆட்சியர் அலுவலகம் இருக்கும் இடம் கோவிலுக்கு சொந்தமானது.
எத்தனையோ மக்கள் பிரச்சினை இருக்கையில் கலெக்டர் மெர்ஸி தனது மத நம்பிக்கைக்கு முக்கித்துவம் கொடுத்து மற்ற மத நம்பிக்கைகளை வெறுப்பது என்பது மாவட்ட நிர்வாகத்தில் இவர் எப்படி நடுநிலையாக செயல்படுவார் என்று கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு கிறித்துவர்களுக்கு அடிபணிந்து போகும் நிலை தான்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதே கன்னியாகுமரியில் கிறிஸ்துவ பாதிரியார் பொன்னையா, இந்த ஆட்சி கிறித்துவர்கள் போட்ட பிச்சை எனவும், திமுக ஆட்சியில் நாம் சொல்வது நடக்கும் என பேசியதை தமிழர்கள் மறந்து இருக்க மாட்டோம்.
திமுகவின் செயல்பாடு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதை ஊர்ஜிதப் படுத்துவதாக இருக்கிறது. காவல்துறை நுண்ணறிவு பிரிவு உட்பட பல முக்கிய பொறுப்புகளில் கிறித்துவர்கள் நியமிக்கப்பட்டது யதார்த்தமாக நடந்ததாக தெரியவில்லை. சமீபத்தில் மாவட்ட கலெக்டர்களில் அதிகமானவர்கள் கிறித்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மிஷனரிகளுடன் கைகோர்த்து கொண்டு மதமாற்றத்திற்கு உறு துணையாக செயல்பட்டார் என்கிற செய்தி வந்தது கவனிக்கதக்கது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மக்கள் மனதில் பெரும் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணியில் பாரபட்சம் நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே மக்களிடம் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை போக்க, ஒருதலைப்பட்சமாக செயல்படும் மாவட்ட கலெக்டர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட தக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இது தொடருமானால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.