
தேசிய சிந்தனை பேரவை சார்பில், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வீர வாஞ்சிநாதன் தியாகத் திருநாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.
17.6.2023 சனிக்கிழமை அன்று தேசிய சிந்தனை பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள வீர வாஞ்சிநாதன் நினைவு மண்டபத்தில் வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏபிவிபி கல்லூரி மாணவர் அமைப்பு சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டார்கள். உள்ளூர் பொதுமக்கள் மற்றும் தேசியவாதிகள் பலர் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள் .
மேலும் அவரது நினைவை போற்றும் வகையில் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் ரயில்வே நிலையத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப் படத்திற்கும் அனைவரும் அஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தினார்கள்.