
இந்து முன்னணி மத்திய சென்னை பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 21 நேற்று மாலை அமைந்தகரை பகுதி அய்யாவு திருமண மகாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் க. பக்தவத்சலம், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி. இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிகாட்டினார்கள்.
கடந்த 16ஆம் தேதி மத்திய சென்னை மாவட்டத்தில் 13 இடங்களில் சிறப்பாக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்தியதற்கு இந்தக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள்.
வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் சென்னை ஓட்டேரி ஹேமராஜ் பேலஸில் நடத்துவது.
ஆடி வெள்ளிக் கிழமைகளில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடத்துவது.
வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி சென்னை மாநகரத்தில் அனைத்து கோவில்களிலும் உழவாரப்பணி சிறப்பாக செய்வது. அதற்காக அனைத்து ஆன்மிக அமைப்புக்கள் சிவனடியார் திருக்கூட்டத்தார் ஆகியோரை இணைத்து நடத்துவது ஆகிய விஷயங்கள் முடிவு செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநகர, மாவட்ட, தொகுதி, வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.