December 6, 2025, 9:10 PM
25.6 C
Chennai

உதயநிதி, சேகர்பாபுவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: மதுரையில் பாஜக.,வினர் கைது!

madurai bjp protest against sekar babu - 2025
#image_title

சனாதனத்தை அவதூறாக பேசி வரும் அமைச்சர். சேகர்பாபுவை கண்டித்து மதுரையில் பாஜக., மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் அமைச்சர் சேகர்பாபு உதயநிதி ஆகியோர் பதவி விலகk கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்த போது, கைது செய்யப்பட்டனர். சனாதனத்தை பற்றி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதைக் கண்டித்து, மதுரை மாவட்டம் பாஜகவினர், நிர்வாகி மகா சுசீந்திரன் தலைமையில் மதுரை எல்லீஸ் சகையில் உள்ள இந்து சமய அறநிலை ஆட்சித் துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் ஈடுபட்டனர்.

அப்போது, அமைச்சர் சேகபாபு பதவி விலக வேண்டும், உதயநிதி பதவி விலக வேண்டும், சனாதனத்தை பற்றி பேசியதை கண்டித்து பாஜகவினர் கோசமிட்டனர்.
மதுரை நகர போலீசார் மறியலில் ஈடுபட்ட பாஜகவினரின் கைது செய்து, தனியார் மண்டபத்தில் சிறைப்படுத்தினர். இதனால், மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக., ஆர்ப்பாட்டம்

முன்னதாக, மதுரையில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில், சென்னையில் நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.இதனை கண்டிக்கும் வகையில் பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் என, பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோரை கண்டித்தும் உடனடியாக இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என, தமிழக முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி, மதுரை எல்லீஸ் நகரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே, பாஜக போராட்டம் அறிவித்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகர் பாஜக மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன்,தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பாஜகவினர் நடத்திய இந்த போராட்டத்தினால் எல்லிஸ் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories