அமமுக., கொடிக்கம்பம், பீடம் தகர்ப்பு: போலீசார் விசாரணை!

ammk flag in janagai mariaaman temple - 2026

சோழவந்தானில் அம மு க கொடிக்கம்பம் மற்றும் பீடம் தகர்ப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் சூழலில், அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் தேர்வு மற்றும் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் தொகுதியில் வருகின்ற 6ஆம் தேதி புதன்கிழமை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் , சோழவந்தான் மற்றும் அலங்காநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில், கட்சியினர் சோழவந்தான் அலங்காநல்லூர் பகுதிகளில், கொடியேற்றுவதற்காக கொடி கம்பம் நடும் பணியினை செய்து வருகின்றனர். சோழவந்தான் பேரூர் கழகம் சார்பாக, பேரூர் செயலாளர் திரவியம் ஏற்பாட்டில், ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அனைத்து கட்சிகளும் இருக்கும் கொடி கம்பங்களுக்கு மத்தியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியினை ஏற்றி வைப்பதற்கான பணிகளை செய்து வந்தனர்.

இதற்கான கொடிமரத்தினையும் கொடி மரத்திற்கான பீடம் அமைக்கும் பணியினையும் செய்திருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் கொடி கம்பத்தினை அகற்றியும் பீடத்தினை சேதப்படுத்தியும் சென்று விட்டனர். இதனை அறிந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மாவட்டத் துணைச் செயலாளர் வீரமாரி பாண்டியன், ஒன்றிய செயலாளர் ராஜன், பேரூர் செயலாளர் திரவியம், பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், சுந்தர் ரபீக், ரஜினி பிரபு, முனைவர் பாலு
மற்றும் தொண்டர்கள் அந்த இடத்தில் திரண்டனர். இது குறித்து, காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க
ப்பட்டு, காவல் காவல் துறையினர் வந்து கொடிமரத்தினை அகற்றி சென்றவர்கள் மற்றும் பீடத்தினை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூறுகையில்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை பிடிக்காத சில விஷமிகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையில் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இ

ந்த செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதுகுறித்து, கழகப் பொதுச் செயலாளர் மண்டலத் தலைவர் டேவிட் அண்ணாதுரை மற்றும் மாவட்டச் செயலாளர் மேலூர் சரவணன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories