தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
பரமாத்மா செய்ய விரும்பற செயல்களை என் வாயிலாச் செய்யறான்னே நான் நினைக்கிறேன். அவன் என் மூலம் செய்பவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இந்த விஷயங்கள் எல்லாத்திலயும் பார்க்கும் போது பிரும்மாண்டத்தில நாம தலைவணங்கற ரொம்ப சக்திவாய்ந்தவங்க எல்லாம் அவங்க பற்றற்றவங்களாவே காணப்படுறாங்க. முழுமையா பற்றே இல்லாதவங்க.
அவங்க உடல்ல ஆடைகள் இல்லை. அவங்க மேல அலங்கார அணிகலன்கள் இல்லை. மாளிகை இல்லை. ஒண்ணுமே இல்லை. அவங்க மலைகள்ல சுற்றித் திரியறாங்க, பற்றற்ற வாழ்க்கை.
சிவபெருமானுடைய இந்த பற்றற்ற தன்மை தான், எனக்கு ஒருவேளை, ஆணையிட்டிருக்கணும், நீ பற்றற்றவனா வாழணும்னு. நானும் கூட, அமைப்புகளுக்கு உட்பட்டு எந்த இடமா இருந்தாலும், என்னுடைய உடல் என்ன வகையா வேணா இருக்கலாம், ஆனா நான் மனதாலும் ஆன்மாவாலும் பற்றற்ற நிலையில வாழறேன். இந்த பற்றற்ற நிலையில வாழ எனக்கு சிவபெருமான் தான் ஆணையிட்டிருக்கிறான்னு நான் நினைக்கறேன்.