செங்கோட்டை விசுவநாதபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து, கருமாரி தம்பதியினரின் மகன் கவின்ஹரீஷ்குமார் இவர் அந்த பகுதியில் உள்ள எம்எம்.அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் ஆகஸ்ட் மாதம் 17. 18ஆம் தேதிகளில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 20224-2025ஆம் ஆண்டிற்கான 14வயதுக்குட்பட்ட இளையோருக்கான நடந்த டேக்வாண்டோ போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தார். மேலும் தமிழக அளவில் நடந்த போட்டியில் மாநிலத்தின் முதல் வகுப்பில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா வெற்றி மாணவர் மற்றும் கலந்து கொண்ட மாணவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.