செங்கோட்டை பகுதியில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்
செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்
இந்தாண்டு கிருஷ்ணஜெயந்தி விழாவில் ஆக-25ஆம் தேதி மாலை 6மணிக்கு இளைஞர்களுக்கான வழுக்குமரம் ஏறும் போட்டி நடந்தது. போட்டியில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனா். பின்னா் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திங்கட்கிழமை மாலை 3மணிக்கு சமுதாய நிர்வாகிகள் பெரியோர்கள் கலந்து கொண்டு சமுதாய கொடியேற்று நிகழ்ச்சியும் அதனைதொடா்ந்து சிறுவர்-சிறுமியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு கலந்து கொண்ட வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாலை 5மணிக்கு சிவகாசி-நாராணபுரம் ஸ்ரீ-சக்கரத்தாழ்வார் கோவில் கோலாட்ட குழுவினா் பஜனையுடன் பகவான் ஸ்ரீகிருஷ்ணா் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி செண்டை மேளம் வாணவேடிக்கையுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடந்தது.
இரவு 9மணிக்கு மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை விழா கமிட்டியார், சமுதாய நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினா்கள், செயற்குழு உறுப்பினா்கள், இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலா் சிறப்பாக செய்திருந்தனா்.
செங்கோட்டை மேலுார் பகுதியில் கிருஷ்ண ஜயந்தி விழா
சிறுவா்-சிறுமியா் ராதை,கிருஷ்ணர் வேடமணிந்து ஊர்வலம்.
செங்கோட்டை மேலுார் சேனைத்தலைவா் சமுதாயம் சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்
இந்தாண்டு விழாவில் அருள்மிகு சேனைகுலவிநாயகா் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னா் கோவில் முன்பிலிருந்து கிருஷ்ணர்-ராதை வேடமணிந்த சிறுவர்-சிறுமியா்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிந்தா கோஷத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் நிறைவு பெற்றது.
அதனை தொடா்ந்து கிருஷ்ணா்-ராதை வேடமணிந்த சிறுவா், சிறுமியா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சமுதாய நாட்டாமை கணபதி தலைமைதாங்கினார் செயலாளார் பிச்சுமணி(எ)சாமி, நகர்மன்ற உறுப்பினா் இந்துமதிசக்திவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனா். பொருளாளா் சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனை தொடர்ந்து தமிழாசிரியா் பிச்சம்மாள்இசக்கிமுத்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பின்னா் சிறுவர்-சிறுமியா்களுக்கு சமுதாய பெரியோர்கள், நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி வாழ்த்தினா். நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினா்கள் குருசாமி(எ)செல்வம், இரணியவேல், ஐயப்பன், ஆதிமூலம், சி.ஆதிமூலம் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
செங்கோட்டை வடக்கத்தி அம்மன் கோவில் தெருவில் கிருஷ்ண ஜயந்தி விழா
செங்கோட்டை கோனார் தெருவில் யாதவா் சமுதாயம் சார்பில் வடக்கத்தி அம்மன் கோவில் முன்பு வைத்து ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம் இந்தாண்டு விழாவில் வடக்கத்தி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவிற்கு சமுதாய நாட்டாமை தலைமைதாங்கினார். செயலாளா், பொருளாளா் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலைவகித்தனா். .
அதனைதொடா்ந்து சிறுவா்-சிறுமியா்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னா் சிறுவர்-சிறுமியாகள் கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிந்தா கோஷத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது.
பின்னா் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியா், சமுதாய பெரியோர், நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலா் சிறப்பாக செய்திருந்தனா்.