செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி சுந்தரராஜபெருமாள் கோவிலில் திருவோண விழா.
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பூமி நீளா சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் திருவோண பண்டிகை விழா சிறப்பாக
நடப்பது வழக்கம் இந்தாண்டு நடந்த திருவோண விழாவில் காலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்தில் வண்ண மலர்கள் கொண்டு அத்தப்பூ கோலமிடும் வைபவம் நடந்தது.
அதனைதொடா்ந்து 10.30மணிக்கு வாசனை திரவியங்கள் கொண்டு பூமி நீளா சமேத ஸ்ரீசுந்தரராஜபெருமாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. 11மணிக்கு சிறப்பு தீபாராதனை இரவு 7மணிக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவா் பணிநிறைவு பெற்ற ஆசிரியா் ஆறுமுகம், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பெரியசாமி, முருகன் மற்றும் கமிட்டி உறுப்பினா்கள் சிறப்பாக செய்திருந்தனா். பண்பொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.