December 6, 2025, 9:52 AM
26.8 C
Chennai

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகை கால சிறப்பு ரயில்கள்! மைசூரில் இருந்து?

railway news - 2025
#image_title

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி
பண்டிகை கால சிறப்பு ரயில்கள் .. மைசூரில் இருந்து..?

தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் -செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க
தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ள நிலையில் மைசூர் செங்கோட்டை சிறப்பு ரயிலை தீபாவளி மற்றும் சபரிமலை சீசனுக்கு மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06001) அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 05 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06002) அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 06 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து மதியம் 02.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். ‌

செங்கோட்டை சிறப்பு ரயில்…

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில் (06005) அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 06 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06006) அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 07 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இது ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 15 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும்.
தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள்..

தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06049) அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 05, 12 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். (12.45 மணி என்பது அந்த நாள் துவக்கம் என்பதால் அன்றைய நாளிலேயே சேருமிடம் சேருகிறது. மீண்டும் அதே நாளிலேயே மறு மார்க்கத்தில் புறப்படுகிறது) மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – தாம்பரம் சிறப்பு ரயில் (06050) அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 05, 12 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 03.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். ன்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று புதன்கிழமை (அக்டோபர் 23) காலை 8 மணிக்கு துவங்கி விருவிருப்பாக முன்பதிவு நடந்து வருகிறது.

இந்த நிலையில் மைசூர் -செங்கோட்டை சிறப்பு ரயில் கடந்த மாதம் இயக்கப்பட்டது.

இந்த ரயிலை மீண்டும் ராஜபாளையம் மதுரை கரூர் சேலம் வழித்தடத்தில் தீபாவளி மற்றும் சபரிமலை சீசனுக்கு மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் மைசூர் -திருவனந்தபுரம் இடையே மதுரை ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் வழியாக தீபாவளி சபரிமலை சீசனுக்கு இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories