தேனி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்ட நிலையில் இந்த காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை, தீயணைப்படை, மற்றும் உள்ளூர் மக்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த காட்டுத்தீயில் சிக்கி படுகாயம் அடைந்த அனுவித்யா, கண்ணன், நிஷா, தேவி ஆகியோர் மீட்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 மருத்துவர்கள் கொண்ட குழு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
மேலும் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக மலைப்பகுதிக்கு ஹெலிகாப்டர் வந்துள்ளதாகவும், காட்டுத்தீயில் சிக்கியவர்களில் இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.