
இன்று முதல் சிவப்பு நிற அதிநவீன LHB பெட்டிகளுடன் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவுவண்டி (16361/16362)! தனது பயணத்தை புது பொலிவுடன் துவக்கியுள்ளது.
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவுவண்டி (16361/16362) வழி கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் ஶ்ரீவில்லிபத்தூர் சிவகாசி 07.07.2025 இன்று முதல் பல்வேறு வசதிகளுடன் கூடிய LHB பெட்டிகளுடன் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16361/16362) இயக்கப்படுகிறது.
மலை வழியாக முதன் முதலாக அதிநவீன எல்ஹெச்பி பெட்டிகள் இயக்கப்படுகிறது இதுவே முதல் முறையாகும்.இதுவரை மலை வழியாக சுற்றுலா ரயில் மற்றும் தாம்பரம் கொச்சுவேலி சிறப்பு ரயில் மட்டுமே இந்த ரக பெட்டிகளும் இயக்கப்பட்டது. கேரளா ரயில் நிலையங்களில் நடை மேடை நீளம் அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணிகள் முடிந்ததும் 22பெட்டிகளுடன் எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் தினசரி ரயிலாகஇயக்க வாய்ப்பு உள்ளது என கேரளா எம்பி கொடி குன்னில் சுரேஷ் தெரிவித்திருந்தார்.
பயணிகள்தெற்கு ரயில்வேக்கு நன்றி தெரிவித்து உள்ள நிலையில் இதே போன்று கொல்லம் சென்னை கொல்லம் வழி புனலூர் செங்கோட்டை மதுரை ரயில் செங்கோட்டை – தாம்பரம் – செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில்களிலும் LHB பெட்டிகள் இணைத்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொல்லம் – செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கம், கொல்லம் – செங்கோட்டை வழித்தடத்தில் எல்ஹெச்பி ரேக்காக மாற்றப்பட்ட எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று வரவேற்றனர். பயணிகள் சங்கத் தலைவர் அட்வ. என். சந்திரமோகன் மற்றும் புரவலர் என்.பி. ராஜகோபால் ஆகியோர் புனலூர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலின் லோகோ பைலட்டுகளுக்கு ஹரபர்பணம் வழங்கி, ரயில் எஞ்சினுக்கு மாலை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
சங்க நிர்வாகிகள் திபு ரவி, அஜிஷ் புன்னாலா, எஸ். லீ, சுமேஷ் எஸ், ரமேஷ் அவனூர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வரவேற்புக்கு தலைமை தாங்கினர்.
கொல்லம் – செங்கோட்டை வழித்தடத்தில் வழக்கமான ரயிலில் எல்ஹெச்பி ரேக் பெறுவது இதுவே முதல் முறை.
மீட்டர் கேஜ் காலத்தில் கொல்லத்திலிருந்து நாகூர் வரை தினமும் இயக்கப்பட்ட இந்த ரயிலை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.





