
மதுரை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கொழும்பு வழியாக மதுரை விமான நிலையம் வந்த இரு பயணிகளிடம் ரூ8 கோடி மதிப்பிலான 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரைக்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் கடத்தல் பொருள் வருவதாக வந்த தகவலை எடுத்து சுங்கலாக்கா வான் நுண்ணறிவு பிரிவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இரு பயணிகளிடம் சோதனை மேற்கொண்டதில், அவர்கள் கொண்டு வந்த உடமையில் இருந்து 4 கிலோ மதிப்புள்ள இரண்டு பார்சல்களில் எட்டு கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. சர்வதேச மதிப்பில் எட்டு கோடி ரூபாய் ஹைட்ரோ போனிக் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சக்கரா பள்ளியை சேர்ந்த காதர் மைதீன் (வயது 26) மற்றும் சென்னையைச் சேர்ந்த, ரபிக் மகன் சாகுல் ஹமீது(வயது 50) ஆகிய இருவர் மீதும் கஞ்சாவை கடத்தி வந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்த சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் அவர்களை கைது செய்தனர்.





