railway news - 2026

நாகர்கோயில், நெல்லையில் இருந்து மும்பை செல்லும் ரயில்களின் முனையம் மாற்றம்!

சற்றுமுன் இந்தியா நெல்லை பொது தகவல்கள்
railway news - 2026
#image_title

நாகர்கோவில், மற்றும் திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் ரயில்களின் முனையம் மாற்றியமைக்க இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து கொங்கன் வழித்தடத்தின் வழியாக மும்பை தாதர் செல்லக்கூடிய வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இனி லோக்மான்ய திலக் முனையத்திற்கு செல்லும் தாதர் ரயில் முனையம் செல்லாது.

நாகர்கோவிலில் இருந்து சேலம் வழியாக மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் சென்ற ரயில் இனி மும்பை லோக்மான்ய திலக் முனையதிற்கு செல்லும்

நாகர்கோவிலில் இருந்து திருச்சி விழுப்புரம் காஞ்சிபுரம் வழியாக மும்பை சத்திரபதி சிவாஜி டெர்மினஸ் சென்ற ரயில் இனி மும்பை லோக்மான்ய திலக் முனையத்திற்கு செல்லும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது

திருவனந்தபுரத்திலிருந்து கோயம்புத்தூர் சேலம் பெங்களூர் வழியாக மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் செல்லும் வாராந்திர ரயில் இனி லோக்மான்ய திலக் முனையத்திற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு தென் மாவட்டங்களில் இருந்து மும்பை செல்லக்கூடிய ரயில்களின் முனையம் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது .இதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. நடைமுறைப்படுத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய ரயில்வே செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.